< Back
சிறப்புக் கட்டுரைகள்
அமேஸ்பிட் ஜி.டி.எஸ் 4 ஸ்மார்ட் கடிகாரம்
சிறப்புக் கட்டுரைகள்

அமேஸ்பிட் ஜி.டி.எஸ் 4 ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
30 Sep 2022 1:32 PM GMT

அமேஸ்பிட் நிறுவனம் புதிதாக ஜி.டி.எஸ் 4 என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஜி.பி.எஸ். வசதி, 150-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை கண்டறியும் திறன், புளூடூத் இணைப்பு வசதி, இசையைக் கேட்டு ரசிக்கும் வசதி உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இத்தகைய ஸ்மார்ட் கடிகாரங்களில் முதல் முறையாக இரட்டை வட்ட வடிவிலான போலரைஸ்டு ஜி.பி.எஸ். ஆன்டெனா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இது இருக்குமிடத்தை துல்லியமாகக் காட்டும்.

இது 1.75 அங்குல அமோலெட் திரையைக்கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 7 இயங்குதளம் உள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, கைராஸ்கோப் உள்ளிட்ட வசதி மற்றும் நீர் புகாத தன்மை கொண்டது.

மைக்ரோபோன், அலெக்ஸாவுக்கான ஸ்பீக்கர், குரல்வழி கட்டுப்பாடு வசதி கொண்டது. 300 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பேட்டரியின் ஆயுளை 16 மணி நேரம் வரை நீடித்திருக்கச் செய்யும். உபயோகத்தில் இல்லாத நிலையில் 8 நாட்கள் வரை பேட்டரி நீடித்திருக்கும்.

கருப்பு, இளம் சிவப்பு நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.16,999.

மேலும் செய்திகள்