< Back
சிறப்புக் கட்டுரைகள்
பழமை
சிறப்புக் கட்டுரைகள்

பழமை

தினத்தந்தி
|
19 Nov 2022 5:35 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு பரிசாகக் கொடுத்தது ரஷியா.

எப்போதும் போர்க்களமாக இருக்கும் ஆப்கானிஸ்தானில் ஆயுதங்களும், கவச வாகனங்களும் சென்று இறங்கியபடி இருக்கின்றன. மிக அரிதாக, அங்கிருந்து ஏற்றுமதியான டாங்கி இது. 1920-ம் ஆண்டு போலந்து நாட்டுக்கும் ரஷியாவுக்கும் போர் மூண்டது. அப்போது போலந்து படைகள் பயன்படுத்திய எப்டி-17 ரக டாங்கி இது. ரஷியப் படைகள் இதைக் கைப்பற்றின.

அப்போது சோவியத் யூனியனுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நட்பு இருந்தது. அந்த அடிப்படையில் இதை ஆப்கானிஸ்தானுக்கு பரிசாகக் கொடுத்தது ரஷியா. தலைநகர் காபூலில் பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் இருந்த இதை, போலந்து தூதர் 2014-ம் ஆண்டில் தற்செயலாக பார்த்திருக்கிறார்.

பழைய காதலியைப் பார்த்ததுபோல அவர் பரவசப்பட, அப்போதைய ஆப்கான் அரசு இதை போலந்துக்கு திரும்பக் கொடுத்துவிட்டது. தனி விமானத்தில் போலந்து தலைநகர் வார்சா சென்று இறங்கிய இதனை, ராணுவ மியூசியத்தில் பாதுகாக்கிறார்கள். இந்த ரக பழமையான டாங்கிகள், ஐரோப்பாவில் மூன்று மட்டுமே மிச்சமிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்