< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஏரோ நெக்பேண்ட் இயர்போன்
சிறப்புக் கட்டுரைகள்

ஏரோ நெக்பேண்ட் இயர்போன்

தினத்தந்தி
|
30 Jun 2022 6:55 PM IST

ஏரோ நிறுவனம் புதிதாக ராக்கர் என்ற பெயரில் நெக்பேண்டுடன் கூடிய இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது எடை குறைவானது. மொத்தம் 6 மாடல்களை இது அறிமுகம் செய்துள்ளது. நெகிழ்வுத் தன்மை கொண்ட கேபிளைக் கொண்டுள்ளது. கருப்பு, தங்க நிறம், நீலம், மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.1,299.

தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தாத சிலிக்கான் ஜெல்லினால் ஆனது. இதனால் இதை தொடர்ந்து பயன்படுத்தினாலும் அரிப்பு உள்ளிட்ட தொந்தரவு ஏற்படாது. புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. குரல்வழி கட்டுப்பாடு மூலமும் இது செயல்படும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 16 மணி நேரம் தொடர்ந்து செயல்படும்.

மேலும் செய்திகள்