< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஏசர் ஐ சீரிஸ் ஸ்மார்ட் டி.வி.
சிறப்புக் கட்டுரைகள்

ஏசர் ஐ சீரிஸ் ஸ்மார்ட் டி.வி.

தினத்தந்தி
|
28 July 2022 6:34 PM IST

கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஏசர் நிறுவனம் தற்போது ஐ சீரிஸில் ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டவையாக 32 அங்குலம் 43 அங்குலம் 50 அங்குலம் 55 அங்குல அளவுகளில் வந்துள்ளது. அனைத்து மாடல்களுமே டியூயல் பேண்ட் வை-பை இணைப்பு வசதி மற்றும் இருவழி புளூடூத் இணைப்பு வசதி கொண்டவை. அனைத்து மாடல்களும் 30 வாட் ஸ்பீக்கர் டால்பி ஆடியோ சிஸ்டம் வசதியுடன் வந்துள்ளது.

32 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.14999. 43 அங்குல மாடல் விலை சுமார் ரூ.27999. 50 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.32999. 55 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.37999. இதில் உள்ளீடாக ஸ்மார்ட் புளூ லைட் ரிடெக்‌ஷன் தொழில்நுட்பம் உள்ளது. இதனால் கண் எரிச்சல் ஏற்படாது. இவற்றில் குவாட் கோர் பிராசஸர் உள்ளது. 32 அங்குல டி.வி. தவிர மற்ற மாடல்களில் 8 ஜி.பி. நினைவகம் உள்ளது.

மேலும் செய்திகள்