< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
மடக்கும் வகையிலான வயர்லெஸ் சார்ஜர்
|17 Feb 2023 8:53 PM IST
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஸ்டப்கூல் நிறுவனம் மூன்று விதமான பயன்பாடுகளைக் கொண்ட காந்த விசை கொண்ட மடக்கும் வகையிலான வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஆப்பிள் ஸ்மார்ட் கடிகாரம், ஏர்பாட் மற்றும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியும். மடக்கும் வகையிலான வடிவமைப்பு கொண்டிருப்பதால் இது பயணங் களின்போது எடுத்துச் செல்ல ஏதுவானது. ஸ்மார்ட் போனுக்கு 10 வாட் திறனையும், ஏர் பாடுக்கு 3 வாட் திறனையும், ஸ்மார்ட் கடிகாரத்துக்கு 2.5 வாட் மின் திறனையும் இது வழங்கும். மின்சாரத்தை ஒரே சீராக அளிக்க 18 வாட் அடாப்டர் உள்ளது. ஒரே சமயத்தில் மூன்று மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.4,990.