< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
வங்கியில் 8,105 பணி இடங்கள்
|11 Jun 2022 10:20 AM IST
வங்கி பணிகளுக்கான ஆட்தேர்வை நடத்தும் வங்கி பணியாளர் தேர்வாணையம் (ஐ.பி.பி.எஸ்) சார்பில் பல்வேறு வங்கி கிளைகளில் குரூப் ஏ, குரூப் பி அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உதவி மானேஜர், வேளாண் அதிகாரி, மார்க்கெட்டிங் ஆபீசர், பொது வங்கி அதிகாரி, சீனியர் மானேஜர் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 8,105 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
1-6-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பதவிக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். மேலும் பதவிகளுக்கு ஏற்ப பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., சி.ஏ. என்ஜினீயரிங் என கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-6-2022. மேலும் விரிவான விவரங்களை https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.