< Back
சிறப்புக் கட்டுரைகள்
2024 நாடாளுமன்ற தேர்தல்: மோடிக்கு சவால் கொடுக்கும் தலைவர் யார்...?  புதிய கருத்து கணிப்பு
சிறப்புக் கட்டுரைகள்

2024 நாடாளுமன்ற தேர்தல்: மோடிக்கு சவால் கொடுக்கும் தலைவர் யார்...? புதிய கருத்து கணிப்பு

தினத்தந்தி
|
12 Sept 2022 1:47 PM IST

நாட்டின் மனநிலையை புரிந்து கொள்ள, ஏபிபி நியூஸ், சி-வோட்டர்ஸ் இணைந்து ஒரு சர்வே நடத்தியது.

புதுடெல்லி

2024- நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. அனைத்துக் கட்சிகளும் வியூகம் வகுப்பதில் மும்முரமாக உள்ளன.

காங்கிரஸ் இழந்த மக்கள் செல்வாக்கை பெறுவதற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ என்ற ஒற்றுமை பத் யாத்திரையைத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

இவர்கள் தவிர டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எனப் பலரது பெயர்களும் அடிபடுகின்றன பிரதமர் வேட்பாளர் பெயர்களில் அடிபடுகின்றன்.

டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி, குஜராத் மற்றும் இமாச்சல சட்டசபை தேர்தலுக்கும் தயாராகி வருகிறது. பாஜகவின் மிகப்பெரிய கோட்டையான குஜராத்திலும் அக்கட்சி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் அக்கட்சியின் செயல்பாடு சிறப்பாக இருந்தால், கெஜ்ரிவாலின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இரண்டாவது முறையாக டெல்லி முதல் மந்திரி நாற்காலியில் அமர்ந்த பிறகு அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட கெஜ்ரிவால் முடிவு செய்தார். ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லிக்கு அடுத்தபடியாக பஞ்சாபில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாட்டின் மனநிலையை புரிந்து கொள்ள, ஏபிபி நியூஸ், சி-வோட்டர்ஸ் இணைந்து ஒரு சர்வே நடத்தியது. வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்கு மோடிக்கு யார் சவாலாக இருப்பார் என்று கருத்துக்கணிப்பை நடத்தியது.

அதில் மோடிக்கு கெஜ்ரிவால், நிதிஷ் குமார் இருவரில் யார் சவாலாக இருப்பார் என்று கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் கெஜ்ரிவாலே மோடிக்கு சவாலாக இருப்பார் என்று கூறி உள்ளனர்.

கெஜ்ரிவால் தான் மோடிக்கு கடும் சவாலாக இருப்பார் என 63 சதவீதம் பேரும் நிதிஷ் குமார் சவாலாக இருப்பார் என 37 சதவீதம் பேரும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கருத்துக்கணிபில் கேட்கபட்ட கேள்விகளும் அதற்கு அளிக்கபட்

மதுபான ஊழலில் நடந்த ரெய்டுகளால் 'ஆம் ஆத்மி'க்கு லாபமா அல்லது நஷ்டமா?

லாபம் - 40%

நஷ்டம் - 42%

பரவாயில்லை - 18%

கேள்வி - ஜாதி மத பிரச்சனைகளில் மோடி காரண்மாக இருப்பாரா?

ஆம் - 60%

இல்லை - 40%

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க நிதிஷ் குமாரால் முடியுமா?

ஆம் - 44%

இல்லை - 56%

நிதீஷ் பிரதமர் வேட்பாளராக வந்தால் பாஜகவுக்கு லாபமா, நஷ்டமா?

லாபம் - 53%

நஷ்டம் - 47%

கட்சித் தலைவர் காந்தி குடும்பத்திற்கு வெளியே இருந்து வந்தால் காங்கிரசுக்கு லாபமா அல்லது நஷ்டமா?

லாபம் - 64%

நஷ்டம்- 36%

தேர்தலில் பாரத் ஜோடோ யாத்திரையால் காங்கிரசுக்கு பலன் கிடைக்குமா?

ஆம் - 50%

இல்லை - 50%

உ.பி.யில் உள்ள மதரசாக்களின் கணக்கெடுப்பு சரியா தவறா?

சரி - 69%

தவறு - 31%

உ.பி., போன்று நாடு முழுவதும் உள்ள மதரசாக்களில் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?

ஆம் - 75%

இல்லை-25

மேலும் செய்திகள்