< Back
மாநில செய்திகள்
சிங்கப் பெருமாள் கோவில் அருகே வீட்டில் பதுக்கிய 20 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சிங்கப் பெருமாள் கோவில் அருகே வீட்டில் பதுக்கிய 20 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
18 Sept 2022 4:04 PM IST

சிங்கப் பெருமாள் கோவில் அருகே வீட்டில் பதுக்கிய 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த வீராபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், அவரது வீட்டில் பதுக்கி வைத்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

இந்த புகையிலை பொருட்களை தொழிற்சாலை, ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் வடமாநில இளைஞர்கள் அதிகம் உள்ள மகேந்திராசிட்டி பகுதியில் கார்த்திகேயன் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்