< Back
மும்பை
மால்வானியில்  போதைப்பொருளுடன் வாலிபர் சிக்கினார்
மும்பை

மால்வானியில் போதைப்பொருளுடன் வாலிபர் சிக்கினார்

தினத்தந்தி
|
25 Oct 2023 12:45 AM IST

மல்வானி பகுதியில் போதைப்பொருளுடன் வாலிபர் பிடிபட்டார்

மும்பை,

மும்பை மால்வானி பகுதியில் போதைப்பொருளுடன் ஆசாமி வரவுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் கடந்த 15-ந்தேதி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹாத்தி பூங்கா அருகே சந்தேகப்படும்படி நடமாடிய ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மால்வானியை சேர்ந்த சமீர் சேக்(வயது35) என்பது தெரியவந்தது. இவரிடம் நடத்திய சோதனையில் 125 கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் போதைப்பொருள் தடுப்பு சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் இவர் மீது கொலை உள்பட 17 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது. மேலும் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்