< Back
மும்பை
சமூகவலைதளம் மூலம் பழகி தாராவி இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் கைது
மும்பை

சமூகவலைதளம் மூலம் பழகி தாராவி இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
22 Aug 2023 12:15 AM IST

சமூகவலைதளம் மூலம் பழகி தாராவியை சேர்ந்த இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

சமூகவலைதளம் மூலம் பழகி தாராவியை சேர்ந்த இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண் கடத்தல்

மும்பை தாராவி பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் மாயமானார். பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடினர். இதில் இளம்பெண் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கல்யாண் ரெயில் நிலையம் சென்றதும், அங்கு இருந்து வெளியே தனியாக நடந்து செல்வதும் ரெயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இளம்பெண் குறித்து விசாரணை நடத்தினர் மேலும் செல்போன் சிக்னல் மூலமாகவும் இளம்பெண்ணை தேடினர்.

வாலிபர் கைது

இதில் இளம்பெண் கர்ஜத் பகுதியில் உள்ள வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் இருந்த இளம்பெண்ணை மீட்டனர். மேலும் அவரை கடத்தி சென்றதாக குணால் ரவீந்திரா (23) என்ற வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி கடத்தி சென்றது தெரியவந்தது.

மேலும் செய்திகள்