< Back
மும்பை
இன்று முதல் 5 நாட்களுக்கு மும்பை உள்பட 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் தகவல்
மும்பை

இன்று முதல் 5 நாட்களுக்கு மும்பை உள்பட 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
7 Sept 2022 9:09 PM IST

இன்று முதல் 5 நாட்களுக்கு மும்பை உள்பட 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

இன்று முதல் 5 நாட்களுக்கு மும்பை உள்பட 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மாலை 5 மணிக்கு இருட்டு

மும்பையில் நேற்று பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் முழு அளவில் இருட்டாக காணப்பட்டது. இதன் காரணமாக தெருவிளக்குகள், மற்றும் சாலையில் செல்லும் வாகனங்கள் விளக்கை எரிய விட்ட படி சென்றது.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு மும்பை உள்பட தானே, பால்கர், புனே, ரத்னகிரி, நாசிக் மற்றும் சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை

இது பற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மும்பையை பொறுத்தவரையில் இன்று முதல் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதைத்தவிர வருகிற 9, 10 மற்றும் 11-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று தானே, ராய்காட் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மும்பை, தானே, பால்கர், புனே, ரத்னகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் இன்று முதல் 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது" என்றார்.

மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செ.மீ. மழை அளவு பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்