< Back
மும்பை
சொகுசு ஓட்டலின் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
மும்பை

சொகுசு ஓட்டலின் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

தினத்தந்தி
|
30 Jun 2023 12:30 AM IST

மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள சொகுசு ஓட்டலின் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள சொகுசு ஓட்டலில் 7-வது மாடியில் பெயிண்டிங் வேலை நடந்து வந்தது. இந்த வேலையில் சாகில் ராஜ்பர் (வயது22) என்ற வாலிபர் ஈடுபட்டு வந்தார். நேற்றுமுன்தினம் மதியம் 12.30 மணி அளவில் ஓட்டலின் 7-வது மாடியில் இருந்த மற்றொரு கட்டிடத்திற்கு செல்லும் இணைப்பு பாலம் வழியாக கடந்து செல்ல முயன்றார். அப்போது தவறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் தொழிலாளி சாகில் ராஜ்பர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீ்ட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான தொழிலாளியின் தந்தை அந்த ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்