மாவட்ட செய்திகள்
30 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
|கட்டுமான பணியின்போது 30 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலியானார். 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது.
தானே,
கட்டுமான பணியின்போது 30 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பணியானார். 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது.
உடலை துளைத்த கம்பிகள்
தானே வர்த்தக் நகர் பகுதியில் 30 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இதன் கட்டுமான பணியில் ஆசிஷ் சவான்(வயது 22) என்ற தொழிலாளி நேற்று ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது பணியின் போது கால் இடறி அவர் கட்டிடத்தின் லிப்ட் செல்லும் வழியாக கீழே விழுந்தார்.
இதில் கட்டிடத்தின் கீழே நீட்டிக்கொண்டிருந்த இரும்பு கம்பிகளில் விழுந்ததில் அவர் உடலை கம்பிகள் துளைத்தன. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து தொழிலாளி பலியானார்.
உடல் மீட்பு
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு படையினர் கம்பிகளை கியாஸ் கட்டர் மூலம் வெட்டி தொழிலாளி ஆசிஷ் சவானின் உடலை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.