< Back
மும்பை
அவுரங்காபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு
மும்பை

அவுரங்காபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு

தினத்தந்தி
|
2 Sept 2022 5:40 PM IST

அவுரங்காபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்தார்.

அவுரங்காபாத்,

அவுரங்காபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த பெண் இன்று மதியம் 12.30 மணி அளவில் திடீரென தீக்குளித்தார். அவரை மீட்ட போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கங்காப்பூர் தாலுகா மண்ட்வா கிராமத்தை சேர்ந்த சவிதா காலே (வயது32) என்பது தெரியவந்தது. இவருடன் அக்கம்பக்கத்தினர் செய்த தகராறின் போது தனக்கு ஆதரவாக கணவர் செயல்படவில்லை எனக்கூறி தீக்குளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்