< Back
மும்பை
மும்பை
மேற்கு விரைவு சாலையில் கார் மோதி பெண் பலி; டிரைவருக்கு வலைவீச்சு
|11 Oct 2023 12:30 AM IST
அந்தேரி கிழக்கு மேற்கு விரைவு சாலையில் கார் மோதி பெண் பலியானார். டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை,
மும்பை அந்தேரி கிழக்கு மேற்கு விரைவு சாலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் பாக்யஸ்ரீ (வயது52) என்ற பெண் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த கார் பாக்யஸ்ரீ மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய அவர் சாலையில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். சுயநினைவை இழந்த அவரை கார் டிரைவர் மீட்டு ஜோகேஸ்வரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அனுமதித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது பற்றி அறிந்த டாக்டர் சம்பவம் குறித்து போலீசில் தெரிவித்தனர். மேலும் பாக்யஸ்ரீ உடல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக நானாவதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.