< Back
மும்பை
குடும்பத்தினர் சித்ரவதையால் மகனுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை; கணவர் வீட்டுக்கு கிராம மக்கள் தீ வைப்பு
மும்பை

குடும்பத்தினர் சித்ரவதையால் மகனுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை; கணவர் வீட்டுக்கு கிராம மக்கள் தீ வைப்பு

தினத்தந்தி
|
12 Aug 2023 1:00 AM IST

அகமத் நகர் பதார்டி கிராமத்தில் குடும்பத்தினர் சித்ரவதையால் மகனுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதனால் கிராம மக்கள் கணவரின் வீட்ட்டுக்கு தீ வைத்தனர். இதையெடுத்து போலிசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

அகமத்நகர்,

அகமத் நகர் மாவட்டம் பதார்டி கிராமத்தை சேர்ந்தவர் நர்வாடே. இவரது மனைவி மனிஷா(வயது32). இவரை கணவர் வீட்டார் சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனிஷா விரக்தியில் இருந்து வந்தார். இந்தநிலையில் மனிஷா சம்பவத்தன்று தனது 9 வயது மகனுடன் கிராமப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தாய், மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் மனிஷாவின் கணவர் வீட்டை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்