< Back
மும்பை
விநாயகர் சதுர்த்தியையொட்டி போக்குவரத்தில் மாற்றம்- 74 சாலைகள் மூடல்
மும்பை

விநாயகர் சதுர்த்தியையொட்டி போக்குவரத்தில் மாற்றம்- 74 சாலைகள் மூடல்

தினத்தந்தி
|
1 Sept 2022 9:19 PM IST

விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 74 சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

மும்பை,

விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 74 சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

தனிப்பாதை

மராட்டியத்தில் 10 நாட்கள் கணபதி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி போக்குவரத்து போலீசார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

கணபதி ஊர்வலத்திற்காக மாநகரில் உள்ள முக்கியமான சாலைகளில் தடுப்புகள் அமைத்து தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கணபதி ஊர்வலத்திற்காக 74 சாலைகள் பொது போக்குவரத்திற்கு மூடப்பட்டு உள்ளது. மேலும் 54 சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருக்கிறது. 114 இடங்களில் நோ பார்க்கிங் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

கனரக வாகனங்கள் தடை

இதைத்தவிர வாகன நெரிசல் ஏற்படா வண்ணம் மும்பையில் 57 சாலைகளில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் கிர்காவ், சிவாஜிபார்க், ஜூகு, மலாடு மால்வாணி சந்திப்பு மற்றும் பவாயில் உள்ள கணேஷ் காட் ஆகிய இடங்கள் மற்றும் கடற்கரைகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

வாகனங்கள் பழுதடைந்தால் அவற்றை அப்புறப்படுத்த கிரேன்கள், அதிக திறன் கொண்ட ராட்சத கிரேன்கள் அப்பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்