தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
|தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கம் சார்பில் 66-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா
மும்பை,
தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கம் சார்பில் 66-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்குகிறது. இதில் பகல் 12 மணியளவில் தாதரில் இருந்து சிட்டிலைட், மாகிம் சர்ச், டி-ஜங்ஷன், தாராவி மெயின் ரோடு வழியாக விநாயகர் சிலை தாராவி, தேவர் நகரில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மேளதாளம், கரகாட்டத்துடன் தமிழர்கள் பாரம்பரியபடி உற்சாகமாக கொண்டு வரப்பட உள்ளது. இன்று தொடங்கும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது. தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் பி.எஸ். பட்டத்தேவர், தர்மகர்த்தா சுப்பையா பாண்டியன், செயலாளர் பரமசிவன் தேவர், பொருளாளர் வேலு தேவர் மற்றும் துணை தலைவர்கள், துணை செயலாளர், தணிக்கையாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து உள்ளனர்.