மும்பையில் உள்ள பழமையான பைகுல்லா ரெயில் நிலையத்துக்கு யுனஸ்கோ விருது
|மும்பையில் உள்ள பழமையான பைகுல்லா ரெயில் நிலையத்துக்கு யுனஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் உள்ள பழமையான பைகுல்லா ரெயில் நிலையத்துக்கு யுனஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது.
பைகுல்லா ரெயில் நிலையம்
மும்பையில் உள்ள பைகுல்லா ரெயில் நிலையம் 1853-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். தற்போது இந்த ரெயில் நிலையம் மூலமாக தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். பைகுல்லா ரெயில் நிலையம் கோதிக் பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாகும்.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கின் போது இந்த ரெயில் நிலையத்தை சீரமைக்கும் பணியை தொண்டு நிறுவனம் மேற்கொண்டது.
யுனஸ்கோ விருது
ரெயில் நிலையம் பாரம்பரிய பாதுகாப்பு கமிட்டியின் வழிகாட்டுதலின்படி சீரமைக்கப்பட்டது. இதன் மூலம் பைகுல்லா ரெயில் நிலையம் பாரம்பரிய தன்மை மாறாமல் புதுபிக்கப்பட்டது.
இந்தநிலையில் பைகுல்லா ரெயில் நிலையத்துக்கு யுனஸ்கோவின் ஆசிய பசிபிக் கலாசார பாரம்பரிய பாதுகாப்பு விருது கிடைத்து உள்ளது.