< Back
மும்பை
சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த எளிதில் அனுமதி கிடைத்துவிடும்- உத்தவ் அணி நம்பிக்கை
மும்பை

சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த எளிதில் அனுமதி கிடைத்துவிடும்- உத்தவ் அணி நம்பிக்கை

தினத்தந்தி
|
20 Sept 2022 2:45 AM IST

தசரா பொதுக்கூட்டம் நடத்த எளிதில் அனுமதி கிடைத்துவிடும் என உத்தவ் தாக்கரே அணியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மும்பை,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு உத்தவ் தாக்கரேவின் வீடு அருகே உள்ள பி.கே.சி. எம்.எம்.ஆர்.டி. மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைத்து உள்ளது. அதே நேரத்தில் உத்தவ் தாக்கரே அணிக்கு சிவாஜிபார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த இதுவரை மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த எளிதில் அனுமதி கிடைத்துவிடும் என உத்தவ் தாக்கரே அணியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அரவிந்த் சாவந்த் எம்.பி. கூறுகையில், "தற்போது எங்களுக்கு எளிதாகி (சிவாஜிபார்க் பொதுக்கூட்ட அனுமதி) உள்ளது. முதலில் வருபவருக்கு முதலில் அனுமதி என்ற முறையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே அடிப்படையில் சிவாஜிபார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த எங்களுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்