< Back
மும்பை
உத்தவ் சிவசேனா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு - தற்கொலையா? போலீஸ் விசாரணை
மும்பை

உத்தவ் சிவசேனா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு - தற்கொலையா? போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
1 Sep 2023 7:15 PM GMT

உத்தவ் சிவசேனா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

உத்தவ் சிவசேனா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் கவுன்சிலர்

மும்பை காட்கோபரை சேர்ந்தவர் சுதிர் சயாஜி மோரே. இவர் உத்தவ் சிவசேனா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர் நேற்று முன்தினம் இரவு ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அவரது பாதுகாவலர்கள் உடன் சென்றனர். ஆனால் அவர்களை வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டு கவுன்சிலர் மட்டும் தனியாக காரில் புறப்பட்டு சென்றார். இதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் காட்கோபர் ரெயில் நிலையம் அருகே விரைவு வழித்தட தண்டவாளத்தில் ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு படுகாயங்களுடன் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தண்டவாளத்தில் பிணமாக மீட்பு

இதன்பேரில் ரெயில்வே போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு இறந்தவர் யார் என விசாரணை நடத்தினர். இதில், ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் முன்னாள் கவுன்சிலர் சுதிர் சயாஜி மோரே என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக மர்மநபர் ஒருவர் சுதிர் சயாஜி மோரேவை மிரட்டி வந்தது தெரியவந்தது. இருப்பினும் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்