தானே அருகே இரும்பு கம்பியால் தாக்கியதில் டி.வி. நடிகர் படுகாயம்- 2 பேருக்கு வலைவீச்சு
|தானே அருகே டி.வி. நடிகரை 2 பேர் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அம்பர்நாத்,
தானே அருகே டி.வி. நடிகரை 2 பேர் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
வழி மறித்து தாக்குதல்
தானே மாவட்டம் அம்பர்நாத் டவுண் பகுதியை சேர்ந்தவர் புனித் தல்ரேஜா(வயது 34). டி.வி நடிகர். கடந்த 28-ந்தேதி இரவு தனது தாய்க்கு மருந்து வாங்க கடைக்கு சென்றிருந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது, பின்னால் ஸ்கூட்டரில் 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர். டி.வி. நடிகர் புனித் தல்ரேஜாவை முந்தி செல்ல ஹாரன் ஒலியை எழுப்பினர்.
ஆனால் அவர் வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அவரை முந்திய ஸ்கூட்டரில் வந்த 2 பேர் வழிமறித்தனர்.
டி.வி. நடிகர் படுகாயம்
பின்னர் வழி விடாமல் சென்றதாக கூறி தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் டி.வி. நடிகர் புனித் தல்ரேஜாவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் அவர் படுகாயமடைந்து சாலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சிவாஜி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தாக்கிய 2 நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.