< Back
மும்பை
தொழில் நுட்ப கோளாறால் மும்பை புறநகர் பகுதியில் ரெயில் சேவை பாதிப்பு
மும்பை

தொழில் நுட்ப கோளாறால் மும்பை புறநகர் பகுதியில் ரெயில் சேவை பாதிப்பு

தினத்தந்தி
|
28 Oct 2022 12:15 AM IST

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை புறநகர் பகுதியில் ரெயில்சேவை பாதிப்பு ஏற்பட்டது.

மும்பை,

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை புறநகர் பகுதியில் ரெயில்சேவை பாதிப்பு ஏற்பட்டது.

தொழில் நுட்ப கோளாறு

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து கர்ஜத் நோக்கி நேற்று காலை மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. அம்பர்நாத்-பத்லாப்பூர் இடையே சென்ற மின்சார ரெயிலில் திடீரென தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டதை மோட்டார் மேன் அறிந்தார்.

உடனே ரெயிலை நிறுத்தி சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் அதிகாரிகள் ஊழியர்களுடன் வந்து கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் சேவை பாதிப்பு

இதற்கிடையே கர்ஜத் நோக்கி சென்ற மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் சில பயணிகள் ரெயிலை விட்டு இறங்கி தண்டவாளம் வழியாக நடந்து சென்றனர்.

தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று காலை பணிக்கு சென்றவர்கள் போக்குவரத்து பாதிப்பால் மிகவும் அவதி அடைந்தனர். மும்பை புறநகர் பகுதியில் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

சுமார் 1 மணி நேரம் போராடி சுமார் 7.50 மணி அளவில் சரிசெய்யப்பட்டது. இதன்பின்னர் தாமதமாக மின்சார ரெயில்கள் புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்