< Back
மும்பை
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 90 சதவீதத்தை தொட்டது
மும்பை

மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 90 சதவீதத்தை தொட்டது

தினத்தந்தி
|
30 Aug 2023 1:15 AM IST

மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 90 சதவீதத்தை தொட்டுள்ளது.

மும்பை,

மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 90 சதவீதத்தை தொட்டுள்ளது.

4 ஏரிகள் நிரம்பின

மும்பையில் நடப்பாண்டு பருவ மழைக்காலம் தாமதமாக தொடங்கியது. இதன் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் 5 சதவீதம் அளவுக்கு குறைந்தது. இந்தநிலையில் ஜூன் மாதக் கடைசியில் நகரில் மழைக்காலம் தொடங்கியது. ஜூலை மாதம் பெய்த பலத்த மழையால் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்தது. கடந்த மாதம் மட்டும் நகருக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் 4 ஏரிகள் நிரம்பியது. ஒட்டுமொத்தமாக ஏரிகளின் நீர்மட்டம் 80 சதவீதத்தை தாண்டியது. ஆனால் ஆகஸ்ட் மாதம் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் அதிக அளவில் உயரவில்லை.

90 சதவீதத்தை தொட்டது

கடந்த சில நாட்களாக நகரில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது. இதில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 90 சதவீதத்தை தொட்டுள்ளது. ஏரிகளில் தற்போது 13 லட்சத்து 3 ஆயிரத்து 864 மில்லியன் லிட்டர் தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் நகரின் 350 நாள் தேவைக்கு போதுமானதாக இருக்கும். நகருக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 14 லட்சத்து 47 ஆயிரத்து 363 மில்லியன் லிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்