< Back
மும்பை
ஆட்சியில் தேசியவாத காங்கிரசுக்கு உரிய பங்கு கிடைக்கும்; அஜித்பவார் அணி தலைவர் நம்பிக்கை
மும்பை

ஆட்சியில் தேசியவாத காங்கிரசுக்கு உரிய பங்கு கிடைக்கும்; அஜித்பவார் அணி தலைவர் நம்பிக்கை

தினத்தந்தி
|
4 Sept 2023 1:00 AM IST

ஆட்சியில் தேசியவாத காங்கிரசுக்கு உரிய பங்கு கிடைக்கும் என அஜித்பவார் அணியை சேர்ந்த பிரபுல் படேல் எம்.பி. கூறியுள்ளார்.

மும்பை,

ஆட்சியில் தேசியவாத காங்கிரசுக்கு உரிய பங்கு கிடைக்கும் என அஜித்பவார் அணியை சேர்ந்த பிரபுல் படேல் எம்.பி. கூறியுள்ளார்.

உரிய பங்கு கிடைக்கும்

தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் அணியை சேர்ந்த பிரபுல் படேல் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- சிவசேனா, பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அரசிலும், நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலின் போதும் தேசியவாத காங்கிரசுக்கு உரிய பங்கு அளிக்கப்படும் என பா.ஜனதா உறுதி அளித்து உள்ளது.

மந்திரி சபை விரிவாக்கம்

மந்திரி சபை விரிவாக்கம், மாவட்ட பொறுப்பு மந்திரிகள் நியமனம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டம், ஒரு போட்டோ வாய்ப்பு கூட்டம் தான். அவர்களால் ஒரு லோகா, அமைப்பாளரை கூட முடிவு செய்ய முடியவில்லை. மேற்கு வங்காளம், மேலும் சில மாநிலங்களில் முரண்பாடு உள்ளது. எனவே எதிர்க்கட்சிகளால் தேர்தலில் ஒன்று இணைந்து போட்டியிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்