< Back
மும்பை
தானேயில் மனைவியை குத்தி கொலை செய்தவர் சிக்கினார்
மும்பை

தானேயில் மனைவியை குத்தி கொலை செய்தவர் சிக்கினார்

தினத்தந்தி
|
27 Sept 2022 9:45 AM IST

தானேயில் மனைவியை குத்தி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

தானே,

தானேயில் மனைவியை குத்தி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கத்தியால் குத்தினார்

தானே மாவட்டம் டீஸ்காவ் பாடா பகுதியை சேர்ந்தவர் சுனில் ஷிண்டே (வயது40). இவரது மனைவி ஷில்பா (35). சுனில் ஷிண்டே வேலை இல்லாமல் இருந்து உள்ளார். எனவே மனைவிதான் வீட்டு செலவை கவனித்து வந்தார். இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலையும் வழக்கம்போல கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுனில் ஷிண்டே மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் தடுக்க முயன்றார். எனினும் சுனில் ஷிண்டே அவரையும் கத்தியால் தாக்கினார். இதனால் அவரும் காயமடைந்தார்.

மனைவி பலி

இந்தநிலையில் அக்கம் பக்கத்தினர் திரண்டு சுனில் ஷிண்டேயை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் காயமடைந்த 2 பேரையும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஷில்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோல்சேவாடி போலீசார் மனைவியை கொலை செய்து, பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கிய சுனில் ஷிண்டேயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்