தலையில் கல்லைப்போட்டு காவலாளியை கொலை செய்தவர் கைது
|சாந்தாகுருஸ்சில் தலையில் கல்லைப்போட்டு காவலாளியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
சாந்தாகுருஸ்சில் தலையில் கல்லைப்போட்டு காவலாளியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
வாலிபர் கொலை
மும்பை சாந்தாகுருஸ் எஸ்.வி. சாலை ஓரமாக கடந்த 30-ந்தேதி காவலாளியான ராஜேஷ்குமார் சுக்லா(வயது35) என்பவர் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 2 மணி அளவில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டு விட்டு தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் சுக்லா உயிரிழந்தார்.
போலீசில் பிடிபட்டார்
இது குறித்து சாந்தாகுருஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் கொலையாளி அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர்(வயது48) என அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இறுதியாக கடந்த 30-ந்தேதி கிங் சர்க்கிள் ரெயில் நிலையத்தில் அவர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.