< Back
மும்பை
நடிகையை ஓட்டலுக்கு அழைத்து மானபங்கம்- பங்கு தரகர் கைது
மும்பை

நடிகையை ஓட்டலுக்கு அழைத்து மானபங்கம்- பங்கு தரகர் கைது

தினத்தந்தி
|
6 Aug 2022 8:04 PM IST

பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகையை ஓட்டலுக்கு அழைத்து மானபங்கம் செய்த பங்கு தரகரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகையை ஓட்டலுக்கு அழைத்து மானபங்கம் செய்த பங்கு தரகரை போலீசார் கைது செய்தனர்.

விருந்தில் பழக்கம்

மும்பையை சேர்ந்தவர் ஜிக்னேஷ் மேத்தா (வயது48). பங்கு சந்தை தரகர். இவருக்கு செம்பூரில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் 25 வயது துணை நடிகையின் அறிமுகம் கிடைத்தது. 2 பேரும் போன் மூலம் பேசி வந்தனர். பங்கு சந்தை தரகர், துணை நடிகைக்கு படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இந்தநிலையில் படவாய்ப்பு தொடர்பாக படஅதிபர் ஒருவரை சந்திக்க அந்தேரியில் உள்ள ஓட்டலுக்கு வருமாறு நேற்று இரவு துணை நடிகையை பங்கு சந்தை தரகர் அழைத்தார்.

ஓட்டல் அறையில் மானபங்கம்

இதையடுத்து துணை நடிகை அந்த ஓட்டலுக்கு சென்றார். அங்கு ஒரு அறையில் பங்கு தரகர் இருந்தார். வேறுயாரும் இல்லை. அப்போது ஓட்டல் அறையில் பங்கு தரகர், நடிகையை தொட்டு மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. ஒருவழியாக அவரின் பிடியில் இருந்து தப்பி வெளியே வந்த நடிகை ஓட்டல் வரவேற்பு அறையில் இருந்து போலீசாருக்கு போன் செய்தாா்.

இதையடுத்து ஓட்டலுக்கு சென்ற போலீசார் நடிகையை மானபங்கம் செய்த பங்கு தரகர் ஜிக்னேஷ் மேத்தாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்