< Back
மும்பை
சந்திராப்பூரில் காகித தொழிற்சாலை குடோனில் பயங்கர தீ
மாவட்ட செய்திகள்
மும்பை

சந்திராப்பூரில் காகித தொழிற்சாலை குடோனில் பயங்கர தீ

தினத்தந்தி
|
23 May 2022 8:39 PM IST

சந்திராப்பூரில் உள்ள காகித தொழிற்சாலை குடோனில் பயங்கர தீ விபத்தினால் தீயணைப்பு படையினர் விடிய, விடிய போராடி அங்கு பற்றிய தீயை அணைத்தனர்.

சந்திராப்பூர்,

சந்திராப்பூரில் உள்ள காகித தொழிற்சாலை குடோனில் பயங்கர தீ விபத்தினால் தீயணைப்பு படையினர் விடிய, விடிய போராடி அங்கு பற்றிய தீயை அணைத்தனர்.

மரக்கட்டைகளில் பற்றிய தீ

சந்திராப்பூர் மாவட்டத்தில் பல்லார்பூர்-அல்லப்பள்ளி சாலையில் பில்ட் கிராபிக் பேப்பர் புரோடெக்ஸ் என்ற காகிதம் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு சொந்தமான மரக்குடோன் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அங்கிருந்த மரக்கட்டைகள் பற்றி எரிந்ததால் மள மள வென மற்ற இடங்களுக்கு பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இது பற்றி தகவல் அறிந்த சந்திராப்பூர், பல்லார்பூர் மற்றும் பல இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விரைந்தனர்.

பெட்ரோல் பங்க்கில் பற்றியது

அங்கு செல்லும் பாதை சரியில்லாததால் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் அங்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மரக்குடோனில் பற்றிய தீ பரவி அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கும் பரவியது. அதிர்ஷ்டவசமாக அங்கு கடந்த 10 நாட்களாக பெட்ரோல் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் பல்லாப்பூர்-அல்லப்பள்ளி நெடுஞ்சாலை இரவு மூடப்பட்டது.

இதனால் சுமார் 5 கி.மீ தொலைவு வரையில் வாகனம் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று காலை மரக்குடோனில் பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். இதன்பிறகு சாலை போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த 40 ஆயிரம் டன் கொண்ட மரக்கட்டைகள், காதிக பண்டல்கள் எரிந்து நாசமானது.

விபத்தில் யாரும் காயமடையவில்லை என தெரிவித்த போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்