< Back
மும்பை
செம்பூரில் டேங்கர் லாரி மோதி சிறுவன், சிறுமி பலி
மாவட்ட செய்திகள்
மும்பை

செம்பூரில் டேங்கர் லாரி மோதி சிறுவன், சிறுமி பலி

தினத்தந்தி
|
22 Jun 2022 11:23 PM IST

செம்பூரில் டேங்கர் லாரி மோதிய விபத்தில் சிறுவன், சிறுமி பலியாகினர். அவர்களது தாய் படுகாயம் அடைந்தார்.

மும்பை,

செம்பூரில் டேங்கர் லாரி மோதிய விபத்தில் சிறுவன், சிறுமி பலியாகினர். அவர்களது தாய் படுகாயம் அடைந்தார்.

லாரி மோதியது

மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த பெண் ரஞ்சனா. இவர் தனது 3 வயது மகள் ஸ்ரீஸ்டியை மருத்துவ பரிசோதனைக்காக டாக்டரிடம் அழைத்து செல்ல மகன் ரிஷி குப்தா (3) உடன் சென்றார். அங்குள்ள ஓட்டல் அருகே சாலையை கடக்க 3 பேரும் ஓரமாக நின்றனர். அப்போது, அந்த வழியாக வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்ற 3 பேர் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கிய 3 பேரை மீ்ட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி, சிறுவன் பலி

அங்கு சிறுமி ஸ்ரீஸ்டி, சிறுவன் ரிஷி குப்தா ஆகிய 2 பேர் வரும் வழியிலேயே உயிரிழந்தாக டாக்டர் தெரிவித்தனர். தாய் ரஞ்சனாவிற்கு காலில் பலத்த காயமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் ராஜேந்திரா புரோகித் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்