< Back
மும்பை
மும்பை
தானேயில் ஒப்பந்ததாரர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்
|17 Sept 2022 6:09 PM IST
தானேயில் ஒப்பந்ததாரர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தானே,
தானேயை சேர்ந்தவர் கணேஷ் கோகதே. கட்டுமான தொழிலாளர் ஒப்பந்ததாரர். இவர் நேற்று அதிகாலை தானே, கோட்பந்தர் ரோட்டில் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது 5 பேர் மோட்டார் சைக்கிளில் அவர் கார் அருகே வந்தனர். திடீரென அவர்கள் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தப்பி சென்றனர். அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குண்டுகள் எதுவும் கணேஷ் கோகதேயை தாக்கவில்லை. இதனால் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
கட்டுமான தொழிலாளர் ஒப்பந்ததாரர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தானேயில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.