< Back
மும்பை
மும்பை
ஒர்லி அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ; 6 பேர் மீட்பு
|21 Sept 2023 12:15 AM IST
ஒர்லி சீபேஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய 6 பேரும் மீட்கப்பட்டனர்
மும்பை,
மும்பை ஒர்லி சீபேஸ் சாலையில் உள்ள பென்ரீஸ் அப்பாட்ர்ட்மென்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு 10.40 மணி அளவில் முதல் மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதில் முடியாமல் போனதால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து 8 வாகனங்களில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் சிக்கி இருந்த 5 பெண்கள் உள்பட 6 பேரை பத்திரமாக மீட்டனர். இதன்பின்னர் அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு பற்றிய தீயை நேற்று அதிகாலை 1 மணி அளவில் போராடி அணைத்தனர். தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.