< Back
மும்பை
தானேயில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ
மும்பை

தானேயில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ

தினத்தந்தி
|
18 Sept 2023 1:15 AM IST

தானே அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரேன தீ விபத்து ஏற்பட்டது

தானே,

தானேயில் தனியார் பள்ளி அருகே 7 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் 4-வது மாடியில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதில் முடியாமல் போனதால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் அங்கு சென்று வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் யாரும் காயமடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்