< Back
மும்பை
மும்பை
தொழில்மேம்பாட்டு கழகத்துக்கு 181 பிளாட் நிலம் ஒதுக்க மாநில அரசு ஒப்புதல்
|21 Sept 2022 8:30 AM IST
தொழில் மேம்பாட்டு கழகத்துக்கு 181 பிளாட் நிலத்தை ஒதுக்க எடுத்த முடிவுக்கு ஷிண்டே அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்துக்கு வரவேண்டிய வேதாந்தா - பாக்ஸ்கான் நிறுவனம் குஜராத்துக்கு சென்றதால் ஏக்நாத் ஷிண்டே அரசு எதிர்க்கட்சிகளால் கடும் விமா்சனத்துக்கு உள்ளானது. முன்னதாக ஏக்நாத் ஷிண்டே அரசு பதவி ஏற்றவுடன், முந்தைய மகாவிகாஸ் ஆட்சியில் மாநில தொழில் மேம்பாட்டு கழகத்துக்கு (எம்.ஐ.டி.சி.) 191 பிளாட் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தது.
இந்தநிலையில் வேதாந்தா - பாக்ஸ்கான் நிறுவன சர்ச்சையை அடுத்து, முந்தைய அரசில் தொழில் மேம்பாட்டு கழகத்துக்கு 181 பிளாட் நிலத்தை ஒதுக்க எடுத்த முடிவுக்கு ஷிண்டே அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. மேலும் 10 பிளாட்களை தொழில் மேம்பாட்டு கழகத்துக்கு ஒதுக்கும் முடிவு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.