< Back
மும்பை
ஆனந்த சதுர்த்தியை யொட்டி சர்ச்கேட்- விரார் இடையே சிறப்பு ரெயில்கள்
மும்பை

ஆனந்த சதுர்த்தியை யொட்டி சர்ச்கேட்- விரார் இடையே சிறப்பு ரெயில்கள்

தினத்தந்தி
|
22 Sep 2023 7:15 PM GMT

ஆனந்த சதுர்த்தியை யொட்டி சர்ச்கேட்-விரார் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

மும்பை,

ஆனந்த சதுர்த்தியை யொட்டி சர்ச்கேட்-விரார் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

சிறப்பு ரெயில்கள்

மும்பையில் வருகிற 28-ந்தேதி ஆனந்த சதுர்த்தியையொட்டி சிலைகளை கரைப்பதற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் மும்பைக்கு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு வருகிற 28 மற்றும் 29-ந்தேதி நள்ளிரவு சர்ச்கேட்-விரார் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மேற்கு ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சர்னிரோடு ரெயில் நிலையம்

பயணிகள் வசதிக்காக விராரில் இருந்து நள்ளிரவு மின்சார ரெயில்கள் 12.15, 12.45, 1.40, 3.00 மணி அளவில் புறப்பட்டு சர்ச்கேட் நோக்கி செல்லும். இதேபோல மறுமார்க்கமாக சர்ச்கேட்டில் இருந்து அதிகாலை 1.15, 1.55, 2.25, 3.20 மணி அளவில் புறப்பட்டு விரார் நோக்கி செல்லும். இந்த ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இதேபோல சிலை கரைப்பு தினத்தில் சர்னி ரோடு ரெயில் நிலைய பிளாட்பாரம் நம்பர் 2 குறுகிய அளவில் இருப்பதால் பயணிகள் கூடுவதை தவிர்க்க மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில் அங்கு மின்சார ரெயில்கள் நிற்காது. மாறாக பிளாட்பாரம் நம்பர் 4-ல் ரெயில்கள் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்