மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்
|மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்
நாக்பூர்,
நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அமித் ராய்புர்கர்(வயது45). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் மதுபோதைக்கு அடிமையானவர் என தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அவர் தனது மனைவி மற்றும் தந்தையிடம் மேலும் மது குடிக்க பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் பணம் தர மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அமித் தனது மனைவியை கடுமையாக தாக்க தொடங்கினர். அப்போது அமித்தின் தந்தை அவரை காப்பாற்ற முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அமித் இரும்பு கம்பி ஒன்றால் தந்தையை கடுமையாக தாக்கினார். இதில் 75 வயதான அவரது தந்தை படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமித்தின் மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். ஆனால் டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.