இளம்பெண்ணை மானபங்கம் செய்த கடைக்காரர் கைது
|வில்லேபார்லே ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை வில்லேபார்லே ரெயில் நிலையத்தில் நேற்று டிக்கெட் கவுண்டருக்கு 22 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். டிக்கெட் எடுக்க வரிசையில் நின்ற போது அருகே நின்ற வாலிபர் ஒருவர், அப்பெண்ணை தொடக்கூடாத இடத்தில் தொட்டு மானபங்கம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுபற்றி அருகில் நின்றுகொண்டிருந்த தனது சகோதரியிடம் தெரிவித்தார். அப்போது மீண்டும் வாலிபர் இளம்பெண்ணின் உடலில் தொட்டார். இதனால் இளம்பெண் சத்தம் போட்டார். இதனை கண்ட மற்ற பயணிகள் விரைந்து வந்து விசாரித்தனர். இதில் வாலிபர், இளம்பெண்ணை மானபங்கம் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வாலிபரை பிடித்து ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் அப்பகுதியில் கடை நடத்தி வரும் பர்மேந்திரா ராம்மூர்த்தி(25) என்பது தெரியவந்தது.