< Back
மும்பை
பிவண்டியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி 80 சதவீதம் நிறைவு
மாவட்ட செய்திகள்
மும்பை

பிவண்டியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி 80 சதவீதம் நிறைவு

தினத்தந்தி
|
4 Jun 2022 11:36 PM IST

பிவண்டியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி 80 சதவீதம் முடிந்துவிட்டதாக மாநகராட்சி கமிஷனர் கூறினார்.

தானே,

பிவண்டியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி 80 சதவீதம் முடிந்துவிட்டதாக மாநகராட்சி கமிஷனர் கூறினார்.

பொதுமக்கள் புகார்

மும்பை, தானேயில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், முன்எச்சரிக்கை பணிகளில் மாநகராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் பிவண்டி நிசாம்புரா மாநகராட்சி பகுதியில் மழைக்கால முன்எச்சரிக்கை பணிகள் முறையாக நடைபெறவில்லை என பொது மக்கள் குற்றம்சாட்டினர்.

இதன் காரணமாக தங்கள் பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவித்து இருந்தனர்.

கமிஷனர் தகவல்

இந்தநிலையில் பிவண்டி நிசாம்புரா பகுதியில் மழைநீர் கால்வாய், சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி 80 சதவீதம் முடிந்து விட்டதாக மாநகராட்சி கமிஷனர் விஜய் குமார் மாசல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " இந்த வாரம் மேயரும், அதிகாரிகளும் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தனர். மழைக்கால முன்எச்சரிக்கை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பணிகள் அடுத்த 4, 5 நாட்களில் முடிந்துவிடும். ஏற்கனவே 80 சதவீதம் சுத்தப்படுத்தும் பணி முடிந்துவிட்டது.

இன்னும் காமத்கர், பாவே காம்பவுன்ட், ஆரிப் கார்டன், பாப்லா காம்பவுன்ட், அன்ஜுர்பாடா, நாராயண் காம்பவுன்ட், பத்மாநகர் உள்ளிட்ட இடங்களில் பணிகள் முடியவில்லை. சங்கம்பாடா பகுதியில் சாக்கடை கால்வாயில் 2-வது கட்டமாக குப்பைகளை அகற்றும் பணி ஓரிரு நாளில் தொடங்கும்" என்றார்.

மேலும் செய்திகள்