< Back
மும்பை
கோவாவில் இருந்து புனேக்கு கடத்தப்பட்ட மதுபானங்கள் பறிமுதல்
மாவட்ட செய்திகள்
மும்பை

கோவாவில் இருந்து புனேக்கு கடத்தப்பட்ட மதுபானங்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
25 Jun 2022 12:54 PM GMT

கோவாவில் இருந்து புனேக்கு கடத்தப்பட்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புனே,

கோவாவில் இருந்து புனேவிற்கு மதுபான பாட்டில்கள் கடத்தப்படுவதாக கலால் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 23-ந்தேதி கட்ரஜ் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புனே அஞ்சனிநகர் பகுதியில் சொகுசு பஸ்சில் இருந்து பார்சலில் அடைக்கப்பட்ட பொருட்கள் ஆட்டோவில் ஏற்றப்படுவதை போலீசார் பார்த்தனர். சந்தேகமடைந்த போலீசார் அந்த ஆட்டோவில் வைக்கப்பட்ட பார்சல்களை சோதனையிட்டனர். அப்போது அதில் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பஸ், ஆட்டோ மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த 3 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது இந்த சம்பவத்தில் ரவீந்திரா கார்கே என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவீந்திரா கார்கே வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அதில் அங்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பஸ், ஆட்டோ மற்றும் மதுபான பாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்