< Back
மும்பை
வாகனத்தில் கடத்திய ரூ.40 லட்சம் இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல்- 2 பேர் கைது
மாவட்ட செய்திகள்
மும்பை

வாகனத்தில் கடத்திய ரூ.40 லட்சம் இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல்- 2 பேர் கைது

தினத்தந்தி
|
17 Jun 2022 7:54 PM IST

வாகனத்தில் கடத்திய ரூ.40 லட்சம் இருமல் மருந்து பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே,

பிவண்டி நகர் பகுதியில் இருந்து மும்பை மற்றும் தானேவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் கடந்த 15-ந்தேதி இரவு பிவானி நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வாகனத்தை வழிமறித்து போலீசார் சோதனை போட்டனர். அதில் இருந்த பார்சலை பிரித்து பார்த்ததில் இருமல் மருந்து பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பார்சலில் இருந்த 7 ஆயிரத்து 200 இருமல் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருமல் மருந்து பாட்டில்களை கடத்தி செல்ல முயன்ற 2 பேரை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்