< Back
மும்பை
மும்பையில் நவம்பர் 1 முதல் கார்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்
மும்பை

மும்பையில் நவம்பர் 1 முதல் கார்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

தினத்தந்தி
|
14 Oct 2022 10:12 PM IST

நவம்பர் 1-ந்தேதிக்குள் வாகன ஓட்டிகள் தங்கள் கார்களில் சீட் பெல்ட் வசதிகளை செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மும்பையில் வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1-ந்தேதிக்குள் வாகன ஓட்டிகள் தங்கள் கார்களில் சீட் பெல்ட் வசதிகளை செய்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194(பி)(1)-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்