< Back
மும்பை
போலீஸ் உளவாளி போல நடித்து ரூ.200 கோடி போதைப்பொருள் கடத்தியவர் தொடர்புடைய இடங்களில் சோதனை - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
மும்பை

போலீஸ் உளவாளி போல நடித்து ரூ.200 கோடி போதைப்பொருள் கடத்தியவர் தொடர்புடைய இடங்களில் சோதனை - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

தினத்தந்தி
|
18 Oct 2023 12:15 AM IST

போலீஸ் உளவாளி போல நடித்து ரூ.200 கோடி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

மும்பை,

போலீஸ் உளவாளி போல நடித்து ரூ.200 கோடி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

ரூ.200 கோடி போதைப்பொருள் கடத்தல்

மும்பை போலீசார் கடந்த மே மாதம் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போதைப்பொருள் கும்பலை சேர்ந்த அஸ்கர் அலி சேராஜியை கைது செய்தனர். அஸ்கர் அலி சேராஜிக்கு தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அஸ்கர் அலி சேராஜி போலீஸ் உளவாளி போல நடித்து உள்ளார். அவர் சிறிய போதை கும்பல் குறித்து போலீசாருக்கு தகவல் கூறிவிட்டு, மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவர் மருந்து என கூறி சரக்கு விமானம் மூலம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு 72 முறை ரூ.200 கோடி அளவுக்கு கேடமைன் எனப்படும் போதைப்பொருளை கடத்தி உள்ளார். அவருக்கு விமான நிலைய ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை சோதனை

இந்தநிலையில் மும்பை போலீசாரின் வழக்கை அடிப்படையாக வைத்து நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் அஸ்கர் அலி சேராஜி மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அஸ்கர் அலி சேராஜி, அவர் தொடர்புடையவர்களின் இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று அதிகாலை வரை நடந்தது.

மேலும் செய்திகள்