< Back
மும்பை
பள்ளிக்கூடம் அருகே செயல்பட்டு வந்த 7 விபசார விடுதிகளுக்கு சீல் வைப்பு
மும்பை

பள்ளிக்கூடம் அருகே செயல்பட்டு வந்த 7 விபசார விடுதிகளுக்கு 'சீல்' வைப்பு

தினத்தந்தி
|
14 Oct 2023 12:30 AM IST

கிர்காவ் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே செயல்பட்டு வந்த 7 விபசார விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மும்பை,

கிர்காவ் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே செயல்பட்டு வந்த 7 விபசார விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

போலீஸ் கமிஷனர் ஆய்வு

மும்பை கிர்காவ் பகுதியில் இயங்கி வரும் பள்ளி அருகே விபசார விடுதி நடந்து வருவதாகவும், இதன் காரணமாக மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும், இதனை மூட நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் வி.பி ரோடு பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார். கல்வி நிறுவனத்தில் இருந்து 200 மீ்ட்டர் தொலைவில் விபசார விடுதிகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

விபசார விடுதிகளுக்கு சீல்

இதையடுத்து விபசார விடுதிகளை 2 மாதத்திற்குள் மூடுமாறு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி அங்கு செயல்பட்டு வந்த 7 விபசார விடுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் ஆள்கடத்தல் பிரிவு போலீசார் இங்கு அதிரடி சோதனை நடத்தி விபசாரத்தில் தள்ளப்பட்ட 33 பெண்களை மீட்டனர். மேலும் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 24 பேரை கைது செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்