< Back
மும்பை
மும்பை
தகானு அருகே சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் பள்ளி மூடல்
|16 July 2023 12:30 AM IST
பால்கர் மாவட்டம் தகானு அருகே சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் அங்குள்ள கிராம பள்ளி மூடப்பட்டது.
வசாய்,
பால்கர் மாவட்டம் தகானு தாலுகா பாவ்டா கிராமத்தில் கடந்த சில தினங்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் காணப்படுகிறது. மேலும் அருகே உள்ள கனிக்பாடா, தோண்டிபாடா பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 9-ந்தேதி முதல் இப்பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை பார்த்து உள்ளனர். இதனால் பாவ்டா கிராம மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர். மேலும் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 நாட்களாக பாவ்டா கிராம பள்ளி மூடப்பட்டது. மேலும் வயதானவர்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் வெளியில் நடமாட வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.