< Back
மும்பை
அம்பர்நாத்தில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து- 15 மாணவர்கள் உயிர் தப்பினர்
மும்பை

அம்பர்நாத்தில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து- 15 மாணவர்கள் உயிர் தப்பினர்

தினத்தந்தி
|
26 Sept 2022 2:30 AM IST

அம்பர்நாத்தில் தனியார் பள்ளி பஸ் ரோட்டில் கவிழ்ந்தது. அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த 15 மாணவர்கள் உயிர் தப்பினர்.

அம்பர்நாத்,

அம்பர்நாத்தில் தனியார் பள்ளி பஸ் ரோட்டில் கவிழ்ந்தது. அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த 15 மாணவர்கள் உயிர் தப்பினர்.

கவிழ்ந்த பஸ்

தானே மாவட்டம் அம்பர்நாத் கிரின் சிட்டி பகுதியில் நேற்று காலை 7 மணியளவில் தனியார் பள்ளி பஸ் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 15 மாணவர்கள் இருந்தனர். இதில் ஒரு வளைவில் சென்ற போது எதிர்பாராதவிதமாக பஸ் கவிழ்ந்தது. விபத்தை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடிச்சென்று பஸ்சில் சிக்கிய மாணவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அதிர்ஷ்டவமாக விபத்தில் மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். இதனால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

பரபரப்பு

எனினும் பள்ளி பஸ் ரோட்டில் கவிழ்ந்த சம்பவத்தால் நேற்று அம்பர்நாத் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் கூறுகையில், "விபத்தில் சிக்கியது தனியார் ஒப்பந்ததாரரால் பள்ளிக்காக இயக்கப்பட்ட பஸ். பள்ளியின் சொந்த பஸ் கிடையாது. குழந்தைகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்" என்றார்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மாணவர்களுடன் பஸ் ரோட்டில் கவிழும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்