< Back
மும்பை
அரசு அதிகாரிகள் போன் அழைப்புகளை எடுக்கும்போது ஹலோ என்பதற்கு பதில் வந்தே மாதரம் சொல்லவேண்டும்- மந்திரி சுதிர் முங்கண்டிவார் வலியுறுத்தல்
மும்பை

அரசு அதிகாரிகள் போன் அழைப்புகளை எடுக்கும்போது ஹலோ என்பதற்கு பதில் 'வந்தே மாதரம்' சொல்லவேண்டும்- மந்திரி சுதிர் முங்கண்டிவார் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
14 Aug 2022 11:43 PM IST

அரசு அதிகாரிகள் போன் அழைப்புகளை எடுக்கும்போது ஹலோ என்பதற்கு பதில் ‘வந்தே மாதரம்’ சொல்லவேண்டும் என மந்திரி சுதிர் முங்கண்டிவார் வலியுறுத்தி உள்ளனர்.

மும்பை,

மந்திரி சுதிர் முங்கண்டிவார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

நாம் சுதந்திரத்தின் 76-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டை நாம் அமுத பெருவிழாவாக கொண்டாடி வருகிறோம். எனவே அரசு அதிகாரிகள் தொலைபேசியை எடுக்கும்போது 'ஹலோ' சொல்வதற்கு பதிலான 'வந்தே மாதரம்' என்று சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதுகுறித்து வருகிற 18-ந் தேதிக்குள் முறையான அரசு உத்தரவு வெளியாகும். அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் 'வந்தே மாதரம்' சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்