< Back
மும்பை
மாவட்ட செய்திகள்
மும்பை
ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய விற்பனை வரி அதிகாரி கைது
|15 Jun 2022 10:22 PM IST
தானேயில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய விற்பனை வரி அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
தானே,
தானே காப்பூர்பாவடி பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கடந்த ஆண்டிற்கான வரி மதிப்பீட்டு தொகையை சமர்பிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே அவர் புதிய ஜி.எஸ்.டி. நம்பர் பதிவு செய்ய விற்பனை வரி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த ஜி.எஸ்.டி. விற்பனை வரி உதவி அதிகாரி தனஞ்செய் ஷிர்சத் என்பவர் ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதற்கு அவரிடம் நடத்திய பேரத்தில் முதற்கட்டமாக ரூ.20 லட்சம் தருவதாக தெரிவித்தார்.
இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் யோசனைப்படி நேற்று ஓட்டல் உரிமையாளர் லஞ்ச பணத்தை கொடுத்தபோது, அதிகாரி தனஞ்செய் ஷிர்சத்தை கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.