< Back
மும்பை
நாளை மறுநாள் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தசரா கூட்டம்; பாடகர் சங்கர் மகாதேவன் பங்கேற்கிறார்
மும்பை

நாளை மறுநாள் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தசரா கூட்டம்; பாடகர் சங்கர் மகாதேவன் பங்கேற்கிறார்

தினத்தந்தி
|
22 Oct 2023 12:45 AM IST

நாளை மறுநாள் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தசரா கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பாடகர் சங்கர் மகாதேவன் பங்கேற்கிறார்

நாக்பூர்,

ஆர்.எஸ்.எஸ். வருடாந்திர தசரா கூட்டம் அந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- விஜயதசமியை முன்னிட்டு நடைபெறும் தசரா கூட்டம் நாக்பூர் ரெசிம்பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் அழைக்கப்பட்டு உள்ளார். முன்னதாக அணிவகுப்பு காலை 6.20 மணிக்கு சி.பி. மற்றும் பெரார் கல்லூரி கேட்டில் தொடங்கி, ரெசிம்பார்க் மைதானம் வரை நடத்தப்படும். முக்கிய நிகழ்ச்சிகள் காலை 7.40 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்ச்சிகள் பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரலையாக ஒளிபரப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 2022-ம் ஆண்டு தசரா பேரணியின்போது எவரெஸ்ட் சிகரத்தில் 2 முறை ஏறி சாதனை படைத்த சந்தோஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். 1925-ம் அண்டு கேசவ் பலிராம் ஹெட்கேவரால் தசரா நாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்