< Back
மும்பை
15 வியாபாரிகளிடம்  சீட்டு பணம் வசூலித்து ரூ.81½ லட்சம் மோசடி
மாவட்ட செய்திகள்
மும்பை

15 வியாபாரிகளிடம் சீட்டு பணம் வசூலித்து ரூ.81½ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
26 May 2022 5:31 PM GMT

15 வியாபாரிகளிடம் சீட்டு பணம் வசூலித்து ரூ.81 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்துவிட்டு தலைமறைவான காய்கறி வியாபாரியை போலீசார் தேடிவருகின்றனர்.

மும்பை,

15 வியாபாரிகளிடம் சீட்டு பணம் வசூலித்து ரூ.81 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்துவிட்டு தலைமறைவான காய்கறி வியாபாரியை போலீசார் தேடிவருகின்றனர்.

சீட்டு பணம்

மும்பை கார் தாண்டா பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார். நடைபாதை வியாபாரி. கொரோனா தொற்று காலத்தில் ஏராளமான வியாபாரிகள் வருமானம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2021-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த சில வியாபாரிகள் சேர்ந்து சீட்டு பணம் வசூலித்து அவசர காலத்தில் வியாபாரிகளுக்கு பணஉதவி பெற்று கொள்ளலாம் என முடிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் அங்கு காய்கறி வியாபாரம் செய்து வந்த சிவ்குமார் ஜெய்ஸ்வால் என்பவர் மற்ற வியாபாரிகளிடம் சீட்டு பணம் வசூலித்து வந்தார். இதன்படி பிரதிப் குமார் அவரிடம் தினசரி ரூ.800-ஐ கொடுத்து வந்தார்.

ரூ.81½ லட்சம் மோசடி

இந்தநிலையில் சீட்டு பணம் வசூலித்து வந்த காய்கறி வியாபாரி சிவ்குமார் ஜெய்ஸ்வால் பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதிப் குமார் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் 15 வியாபாரிகளிடம் இருந்து ரூ.81 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான காய்கறி வியாபாரியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்