< Back
மும்பை
மும்பை
பிவண்டியில் ரூ.55 லட்சம் போலி வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்
|12 Oct 2023 1:15 AM IST
பிவண்டியில் ரூ.55 லட்சம் மதிப்பிலான போலி வெளிநாட்டு மதுபான பாட்டீல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
தானே,
தானே மாவட்டம் பிவண்டி பகுதியில் போலி வெளிநாட்டு மதுபான பாட்டீல்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கலால்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள், போலீசாருடன் சென்று பிவண்டி, அன்காவ் வாடா ரோடு பகுதியில் உள்ள 3 கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த ரூ.55 லட்சத்து 22 ஆயிரத்து 400 மதிப்பிலான 5 ஆயிரத்து 288 போலி வெளிநாட்டு மதுபான பாட்டீல்களை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக பிவண்டியை சேர்ந்த ரமேந்திரகுமார் ரமாகாந்த் (48), ரியாஷ் அலி (55) ஆகியோரை கைது செய்தனர்.